[I dedicate all these below poems to my kutty papa Jagan. He started smiling at people's faces! ]
தமக்கு தாமே
பேசி சிரித்து கொள்கின்றன
குழந்தைகள் ....
தன்னை தானே
படைத்துக் கொண்ட
இந்த பிரபஞ்சம் போல ... "
"நெருங்கிப் பழகிய
நட்புகளையும்
நீண்ட நாள்
சொந்தங்களையும்
சந்தேகத்தில் வைத்து விடுகிறது
வாழ்க்கை ....
குழந்தைகளோ
அந்நியமான முகங்களையும்
பார்த்துச் சிரிக்கின்றன... "
"காரணம் சொன்னார்கள்...
கனவில் தெய்வங்கள் வந்து
ஆசிர்வதிக்கும் பொழுது
குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்குமாம்...
...
குழந்தைகளை தெய்வங்கள்
ஆசிர்வதிக்கின்றனவா
அல்லது
தெய்வங்களை குழந்தைகள்
ஆசிர்வதிக்கின்றனவா?!"
- ராஜேஸ்
தமக்கு தாமே
பேசி சிரித்து கொள்கின்றன
குழந்தைகள் ....
தன்னை தானே
படைத்துக் கொண்ட
இந்த பிரபஞ்சம் போல ... "
"நெருங்கிப் பழகிய
நட்புகளையும்
நீண்ட நாள்
சொந்தங்களையும்
சந்தேகத்தில் வைத்து விடுகிறது
வாழ்க்கை ....
குழந்தைகளோ
அந்நியமான முகங்களையும்
பார்த்துச் சிரிக்கின்றன... "
"காரணம் சொன்னார்கள்...
கனவில் தெய்வங்கள் வந்து
ஆசிர்வதிக்கும் பொழுது
குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்குமாம்...
...
குழந்தைகளை தெய்வங்கள்
ஆசிர்வதிக்கின்றனவா
அல்லது
தெய்வங்களை குழந்தைகள்
ஆசிர்வதிக்கின்றனவா?!"
- ராஜேஸ்
(Children talk to themselves;
And play with themselves;
like this universe;
which created itself;
from void by a bing bang)
(Life makes us doubt;
close relatives and dear friends;
but children keep smiling at even
strangers)
(Are babies blessed by Gods Or;
babies by blessing bless Gods)
Comments
படைத்துக் கொண்ட
இந்த பிரபஞ்சம் போல..
Good one..